தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

10 கி.மீ., வரை சடலத்தை சுமந்து சென்ற குடும்பத்தார் - உதவி செய்த காவல் துறை

உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சுமந்து சென்ற குடும்பத்தினருக்கு வாகன வசதியையும், பணம் உதவியும் செய்து கொடுத்த காவல் துறையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

10 கி.மீ தூரம் சடலத்தை கட்டிலில் சுமந்து சென்ற உறவினர்கள் - காவல்துறையின் அடுத்த நகர்வு?
10 கி.மீ தூரம் சடலத்தை கட்டிலில் சுமந்து சென்ற உறவினர்கள் - காவல்துறையின் அடுத்த நகர்வு?

By

Published : Jul 16, 2022, 9:01 PM IST

தண்டேவாடா : சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தின் திகன்பால் பகுதியில் ஜோகி போடியம் என்ற பெண் வசித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக ரெங்கனார் பகுதியில் உயிரிழந்தார். ஆனால் ரெங்கனார் பகுதியில் இருந்து சொந்த ஊரான திகன்பாலுக்கு பெண்ணின் சடலத்தை கொண்டு செல்ல, உறவினர்களிடம் பணம் இல்லை.

எனவே, குடும்பத்தினர் சடலத்தை கட்டிலில் வைத்து தோளில் சுமந்து கொண்டு ரெங்கனாரிலிருந்து திகன்பாலுக்கு நடந்தே புறப்பட்டனர். இதற்கிடையில் ரெங்கனாரிலிருந்து திகன்பால் வரையிலான தூரம் சுமார் 20 கி.மீ., உள்ள நிலையில், 10 கி.மீ., தூரத்தை கடந்தபோது, குவாகொண்டா காவல் துறையினர் இதனை கவனித்தனர்.

பின்னர் குவாகொண்டா காவல் துறையைச் சேர்ந்த சந்தன் சிங், மோட்டு குஞ்சம் மற்றும் பீமா குஞ்சம் ஆகியோர் வாகனத்தை ஏற்பாடு செய்து உடலை திகன்பாலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தேவையான பண உதவியையும் காவல் துறையினர் செய்து கொடுத்தனர்.

இதையும் படிங்க:ஒரு சடலத்திற்கு இரண்டு இறுதிச்சடங்குகள் - புதைக்கப்பட்ட உடலில் இருக்கும் மர்மம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details