தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமேதி தொகுதி அல்ல, எங்கள் குடும்பம்- பிரியங்கா காந்தி - பிரியங்கா காந்தி

அமேதியுடன் எங்கள் உறவு அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அது எங்களின் குடும்பம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Priyanka Gandhi Vadra news Priyanka Gandhi addressed virtual meeting at Amethi Relationship with Amethi not political அமேதி பிரியங்கா காந்தி காங்கிரஸ்
Priyanka Gandhi Vadra news Priyanka Gandhi addressed virtual meeting at Amethi Relationship with Amethi not political அமேதி பிரியங்கா காந்தி காங்கிரஸ்

By

Published : Jan 27, 2021, 4:40 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் அக்கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அமேதி கிராம நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக பேசினார்.

அப்போது, “அமேதி தொகுதியுடன் எங்கள் உறவு வெறும் அரசியல் சார்ந்தது அல்ல. அமேதி எங்களின் குடும்பம்” என்றார். தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்தும் பேசினார்.

அப்போது அவர், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் எதிரானது” என்றார். மேலும், “சமூகத்தில் எளியோரான விவசாயிகளுக்கு உற்ற தோழனாக இருந்து காங்கிரஸ் எப்போதும் அவர்களுக்கு ஆதரவளிக்கும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் குடியரசுத் தினத்தில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிசிஏ போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுமிக்கு பிரியங்கா காந்தி பரிசு

ABOUT THE AUTHOR

...view details