தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவிரி நதிநீர் பிரச்னை: கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்! - உச்ச நீதிமன்றம்

Cauvery water dispute: தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சனை: கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்!
காவிரி நதிநீர் பிரச்சனை: கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 4:39 PM IST

Updated : Sep 19, 2023, 4:54 PM IST

பெங்களூரு:காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகின்றன. இரு மாநில மக்களுக்கும் முக்கிய ஆதாரமாக காவிரி நதி பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், கர்நாடகா தனது மாநிலத்தின் சில பகுதிகளில் கடுமையான வறட்சியை காரணம் காட்டி, முன்னதாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க மறுத்துவந்தது.

இந்நிலையில், தமிழகத்துக்கு மேலும் 15 நாட்களுக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்குத் தொடர உள்ளதாக கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் நிலைபாட்டை தெளிவுபடுத்த உச்ச நீதிமன்றம் செல்வதே எங்களுக்கான ஒரே வழி. தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விட வேண்டுமா? வேண்டாமா? என்று யோசித்து வருகிறோம். இன்று (செப்.19) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறோம், அதன் பிறகு முடிவு எடுக்கப்படும்" என்றார்.

இந்த நிலைமையை மறுபரிசீலனை செய்ய இரு மாநிலங்களிளுக்கும் ஒரு குழுவை அனுப்பி பின் தீர்ப்பை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா தலைமையிலான எம்.பிக்கள் குழு மத்திய ஜல் சக்தி அமைச்சரை சந்திக்க செல்ல உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், "கடந்த இரண்டு மாதங்களில் வழக்கத்தை விட குறைவான மழை பெய்துள்ளன. 5,000 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டது. ஆனால், 2000 முதல் 3000 கனஅடி மட்டுமே இங்கு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு மாநில அரசு இரு முறை கடிதம் எழுதியும் பதில் ஏதும் இல்லை" என்று அவர் கூறினார்.

சட்ட வல்லுநர்களிடம் இது குறித்து கருத்து கேட்கும் போது நீரை திறந்துவிடாமல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது CWMAயின் உத்தரவை மீறிய செயலாக கருதப்படும் என குறிப்பிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காவேரியில் நீர் இல்லை என கர்நாடக அரசு பொய் சொல்கிறது - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு திறந்து விடக்கூடிய தண்ணீரின் அளவை சரியாக கொடுப்பது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துரை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 12 எம்.பிகள் கொண்ட குழு மத்திய நீர்வளத்துரை அமைச்சரை சந்திக்க நேற்று (18.09.2023) டெல்லி புறப்பட்டனர்.

அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துரை அமைச்சரை சந்தித்து தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளதாக கூறினார். மேலும், காவிரியில் தண்ணீர் இல்லை என கர்நாடக அரசு போய் சொல்வதாக அவர் விமர்சித்தார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான தனிப்பட்ட நீர்ப் பகிர்வு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, 1990 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி, காவிரி நதி நீர்ப் பங்கீடுகள் தீர்ப்பாயம் (CWDT) அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "காவிரியை திறந்து விட நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்" - திருமாவளவன்!

Last Updated : Sep 19, 2023, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details