தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'லாக் டவுனில் ரத்தான விமானங்களின் டிக்கெட் கட்டணம் 99% ரீஃபண்ட்' - ஏர்ஏசியா

டெல்லி: கரோனா பொது முடக்கம் காரணமாக இரண்டு மாதங்களில் ரத்தான விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களில், 99 விழுக்காடு நபர்களுக்கு பணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக ஏர் ஏசியா இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

AirAsia India
ஏர் ஏசியா

By

Published : Apr 10, 2021, 7:11 AM IST

கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கால், ஏப்ரல்-மே மாதங்களில் அனைத்து விதமான விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. அப்போது, ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். திடீரென ரத்தான விமான சேவையால், பல விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கின. பலரால், ரத்தான டிக்கெட் பணத்தை பயணிகளுக்குகொடுக்க முடியவில்லை. மே மாதத்திற்குப் பிறகு, விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால், ரத்தான டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கும் பணி தொடங்கியது.

அந்த வரிசையில், ஏர் ஏசியா நிறுவனம், ஏப்ரல், மே மாதங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களில், 99 விழுக்காடு நபர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்திவிட்டதாக தற்போது அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர்ஏசியா இந்தியாவின் தலைமை வணிக அலுவலர் அங்கூர் கார்க் கூறுகையில், "மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 24, 2020 வரை கோவிட்-19 லாக்டவுன் சமயத்தில் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களில், 99 விழுக்காடு நபர்களுக்கு பணம் திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது. ரீஃபண்ட் பணமானது டிக்கெட் புக் செய்திருந்த வங்கிக் கணக்கு, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுக்கு, டிக்கெட் புக் செய்துகொடுத்த முகவர்களுக்கோ அனுப்பப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்து 30 கோடி ரூபாய் ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு விழுக்காடு நபர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர்களின் விவரங்கள் தெளிவாகத் தெரியும் பட்சத்தில், விரைவில் பணம் திரும்பச் செலுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக ஏப்ரல் 8, சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் செயலர், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில், பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை திரும்ப செலுத்தாதற்கு அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details