தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏழு ஆண்டுகளில் வங்கித்துறையில் வரலாறு காணாத சீர்திருத்தம் - பிரதமர் மோடி பெருமிதம் - வங்கித்துறை சீர்திருத்தம்

கடந்த ஏழு ஆண்டுகளில் வாராக்கடன், டிஜிட்டல் பரிவர்த்தனை உள்ளிட்டவற்றில் வரலாறு காணாத சீர்திருதத்தை அரசு மேற்கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

PM Modi
PM Modi

By

Published : Nov 12, 2021, 3:23 PM IST

Updated : Nov 12, 2021, 4:17 PM IST

வாடிக்கையாளர்களை மையமாக வைத்து ரிசர்வ் வங்கி இரு புதியத் திட்டங்களை இன்று தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பங்கேற்றார்.

நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "இன்று தொடங்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்கள் நாட்டில் முதலீட்டு வாய்ப்பை இந்தத் திட்டங்கள் விரிவுபடுத்தும் என்றும் மூலதனச் சந்தைகளை எளிதாகவும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும்.

நேரடி சிறு முதலீட்டுத் திட்டம், அரசு பங்குப் பத்திரங்களில் பாதுகாப்பான முதலீட்டு வழியாகவும் நாட்டின் சிறு முதலீட்டாளர்களுக்கு எளிதானதாகவும் இருக்கும். இதேபோல், ஒரே தேசம், ஒரே குறைதீர்ப்பு முறை என்பது இன்று ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டத்தால் வங்கித் துறை புதிய வடிவம் பெற்றுள்ளது.

ஏழு ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம்

கடந்த ஏழு ஆண்டுகளில், வாராக் கடன்கள் வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டு, கடன் வசூல் மற்றும் தீர்ப்பாயம், பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடு மீது கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒன்றன்பின் ஒன்றாக நிதித்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது.

வங்கித்துறையை மேலும் வலுப்படுத்த, கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவாக, இந்த வங்கிகளின் நிர்வாகம் மேம்பட்டிருப்பதுடன், முதலீட்டாளர்களிடையே இவற்றின் மீதான நம்பிக்கையும் வலுவடைந்துள்ளது.

ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிச் சேவை, ஓய்வூதியம், காப்பீடு போன்றவை, இந்தியாவில் தனித்தனியாக இயங்கிவந்தன. இந்த சேவைகளை நாட்டில் உள்ள சாமான்ய மக்கள், ஏழைக்குடும்பங்கள், விவசாயிகள், சிறுவணிகர்கள்- வியாபாரிகள், பெண்கள், பட்டியலின, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளிட்டோர் எளிதில் அணுக முடியாததாக இருந்தது.

யுபிஐ சேவை, இந்தியாவைக் குறுகிய காலத்தில் உலகின் முன்னணி டிஜிட்டல் பணபரிவர்த்தனை நாடாக மாற்றிய, 7 ஆண்டுகளில், டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா 19 மடங்கு முன்னேறியுள்ளது. தற்போது நமது வங்கி முறை 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் 12 மாதங்களிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் செயல்பாட்டில் இருக்கும்." இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையும் படிங்க:சோனியா காந்தியை சந்தித்தார் பைலட்- பரபரப்பு தகவல்கள்!

Last Updated : Nov 12, 2021, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details