ஹைதராபாத்: ஜந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் இன்று மற்றும் நாளை (செப்.16 மற்றும் 17) நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை PCC (மேற்கு வங்காளம், தெலங்கானா, ஒடிசா மாநிலங்களின் அமைப்பு மற்றும் மேலாண்மைக்கான பிரதேச காங்கிரஸ் கமிட்டி) செய்துள்ளன. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் தெலுக்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இன்று தொடங்குகின்றன.
காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் புதிய உறுப்பினர்கள் சேர்த்த பின் முதன் முறையாக நடைபெற உள்ளன. காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் நான்கு காங்கிரஸ் முதலமைச்சர்கள் ஆகியோர் செப்டம்பர் 16 மற்றும் 17 நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் கூட்டத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறுகின்றன. அதனை தொடரந்து மேற்கு வங்காளம், தெலங்கானா, ஒடிசா மாநிலங்களின் அமைப்பு மற்றும் மேலாண்மைக்கான பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் இரண்டாம் நாள் கூட்டம் நடைபெறுகின்றன. அதன் பின் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் துக்குகுடா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் கூறும் போது, 159 நபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் அதில் 147 நபர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை மாலை தெலங்கானா தேசிய ஒருங்கிணைப்பு தினத்தை முன்னிட்டு மெகா பேரணி நடத்தப்படவுள்ளதாகவும், தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான 6 முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறும் போது இது மிக முக்கிய கூட்டம். புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் காரியக் குழு கூட்டம் தெலங்கானாவில் நடைபெறுகின்றன. தெலங்கானாவின் முக்கிய கூட்டமாக இது உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கூகுள் ரிவியூவில் கருத்து பதிவிடுவது அவதூறு பரப்புவதா?.. கருத்து சுதந்திரத்தை கெடுத்துவிடாதீர்கள் - சென்னை உயர்நீதிமன்றம்!