ஹைதராபாத்:நடந்து முடிந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. இதில் 39 இடங்களை வென்ற பி.ஆர்.எஸ் இரண்டாவது இடத்தையும், 8 இடங்களை வென்ற பாஜக 3வது இடத்தையும், ஏஐஎம்ஐஎம் (AIMIM) 7 இடங்களை வென்று 4வது இடத்தையும் பிடித்தது.
இதனையடுத்து கடந்த வியாழனன்று (டிச.07) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 11 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். துணை முதலமைச்சராக மல்லு பாட்டி விக்ரமர்க்கா பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், 1999 முதல் 6 முறை எம்ஏல்ஏவாக வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஓவைசியை, இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படுவதாகச் சட்டமன்றம் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்ஏல்ஏக்கள், பதவி ஏற்பு விழாவைப் புறக்கணித்தனர்.
இது குறித்து அம்மாநில பாஜக தலைவர் கிஷான் ரெட்டி கூறுகையில், “புதியதாகப் பதவி ஏற்றுள்ள ரேவந்த் ரெட்டி, கேசிஆர் போல ஏஐஎம்ஐஎம் கட்சியைப் பார்த்துப் பயப்படுகிறார். பேரவையில் உள்ள மூத்த உறுப்பினர்களைத்தான் சபாநாயகர்களாக நியமிப்பது மரபு.