தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ. 2,000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு - how to exchange 2000 rupees notes in banks

செப்டம்பர் 30ம் தேதிக்கு முன் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 19, 2023, 7:09 PM IST

Updated : May 19, 2023, 9:09 PM IST

மும்பை: 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் இந்த நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள நோட்டுக்களை செப்டம்பர் 30ம் தேதிக்கு முன்னதாக வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக தனி கவுண்டர்கள் திறக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மே 23 ம் தேதி முதல் இத்தகையை நோட்டுக்களை டெபாசிட் செய்ய 20 ஆயிரம் ரூபாய் அதிகபட்ச தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டன. அப்போது இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து பணத் தேவையை பூர்த்தி செய்ய இந்த நோட்டுக்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விடுத்துள்ள அறிக்கையில் , 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதற்கான நோக்கம் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. 89 சதவீத 2,000 ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 2017 ம் ஆண்டுக்கு முன்னதாக அச்சிடப்பட்டவை. 4 முதல் 5 ஆண்டுகளில் இவை தங்களின் அதிகபட்ச ஆயுட்காலத்தை எட்டிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு ரூ.6.73 லட்சம் கோடியாக இருந்த இந்த ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை மார்ச் 31, 2023 ல் ரூ.3.62 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவான பரிவர்த்தனைகளுக்கு இந்த பணம் பயன்படுவதில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் புழக்கத்தில் உள்ள மற்ற ரூபாய் நோட்டுக்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் கூறியுள்ள ரிசர்வ் வங்கை இதனை காரணமாக கொண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இதே போன்று ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளிலும் மேற்கொண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை வங்கியில், டெபாசிட் செய்யவும், வேறு நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கான பதில்களை ஆர்பிஐ இணைய தளத்தில் காணலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டது. வங்கிகள் முன்பு பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்கும் வகையில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Last Updated : May 19, 2023, 9:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details