டெல்லி: ரெப்போ ரேட் என்று கூறப்படும் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் நிலையில், கடந்த சில மாதங்களாக மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது 0.40% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு - ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ரிசர்வ் வங்கி நிதி கொள்கை வரைவுக் குழு அறிவுறுத்தலின் பேரில் ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜோத்பூர் கலவரம் - 97 பேர் கைது