டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இன்று (டிச.8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாகவே தொடரும் என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். அதேபோல், இந்த நிதியாண்டில் 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக பொருளாதாரம் உயரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் என்பது, நடப்பு நிதியாண்டில் 5.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. மேலும், கடந்த அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 4.87 சதவீதமாக குறைந்த நிலையில், எம்பிசி கூட்டம் நடந்தது.