டெல்லி:கடந்த மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்குவதாகத் தெரிவித்தது. மேலும், புழக்கத்திலுள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கி மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து இருந்தது. மேலும், ரூ.2,000 நோட்டை மாற்ற செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என ரிசர்வ் வங்கியால் கால நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
மேலும் ,ஒரு நபர் ஒரே நேரத்தில் ரூ.20,000 மதிப்புள்ள நோட்டுகளை வங்கியில் கொடுத்து அல்லது தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. 2023, மே 19ஆம் தேதியில் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி வரை 93 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கியால் தெரிவிக்கப்பட்டது.