தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 24x7 பணப் பரிவர்த்தனை சேவை - ரிசர்வ் வங்கி - ஆர்டிஜிஎஸ் பணப்பரிவர்த்தனை சேவை

வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தும் விதமாக, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை சேவை செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

RBI
RBI

By

Published : Jun 4, 2021, 7:54 PM IST

ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் என்ற National Payments Corporation of India (NPCI) வரும் ஆகஸ்ட் மாதம் தனது சேவையில் முதல் முக்கிய மாற்றத்தை கொண்டுவருகிறது.

அதன்படி, "வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தும் விதமாக, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ்(RTGS - Real-time gross settlement) பணப்பரிவர்த்தனை சேவை அனைத்து நேரமும்(24x7) செயல்படும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி மூலம் பெரிய அளவிலான பணத்தை பரிவர்த்தனை செய்யவே இந்த ஆர்.டி.ஜி.எஸ் சேவை பயன்படுத்தப்படும். இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் மூட்சுவல் பண்ட் முதலீடுகள், காப்பீட்டு பிரீமியம், கடன் தவணை போன்றவற்றை நேரக்கட்டுப்பாடுகள் இன்றி செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"நடப்பாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா விற்கப்படும்" அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதி!

ABOUT THE AUTHOR

...view details