கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 'பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா' என்ற திட்டத்தின் மூலம், 80 கோடி ரேஷன் அட்டைப் பயனாளர்களுக்கு, இலவச அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், கரோனா கால கட்டத்தால் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க இன்னும் மூன்று மாதங்களுக்கு இந்தத் திட்டம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.