உத்தரபிரதேச மாநிலம் பிரெய்லி மாவட்டத்தில் இந்திய விலங்கு நல வாரியத்தின் விலங்கு நல அதிகாரி விகேந்திர ஷர்மா மனோஜ் குமார் என்பவருக்கு எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில் மனோஜ் எலியின் வாலில் நூலில் கற்களைக் கட்டி வாய்க்காலில் வீசியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, வாய்க்கால் நீரில் மூழ்கி எலி இறந்துள்ளது.
நவம்பர் 25ஆம் தேதி எலியின் உடல் ஐவிஆர்ஐக்கு கொண்டு வரப்பட்டதாக டாக்டர் கே.பி.சிங் தெரிவித்தார். டாக்டர் அசோக்குமார் மற்றும் டாக்டர் பவன்குமார் ஆகியோர் இறந்த உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனையில் எலியின் நுரையீரல் வீங்கியிருப்பது தெரிந்தது. எலியின் கல்லீரலிலும் சில பிரச்சனைகள் இருந்தன.