தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இலக்கை அடைய காத்திருக்கும் ராசிக்காரர்களுக்கு இன்று உகந்த நாள்! - ஜோதிடம்

October 21 Rasipalan: ஐப்பசி 4, அக்டோபர் 21 சனிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 6:25 AM IST

மேஷம்: இன்றைய தினத்தில் அலுவலகம் மற்றும் குடும்பம் ஆகிய இரண்டிற்கும் இடையே நீங்கள் சிக்கிக் கொண்டு இருப்பீர்கள். இரு இடத்திலும் உங்கள் கவனம் தேவைப்படுகிறது. மாலை நேரத்தில், சந்தோஷமாக நேரத்தைக் கழிக்க நேரத்தை ஒதுக்கவும். புகழ் அடைய வேண்டும் என்பது உங்களது ஆசை, அது நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: உங்களது பெரும்பாலான நேரத்தை, உங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவதில் செலவழிப்பீர்கள். வர்த்தக ரீதியான சந்திப்புகள் மூலம் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆராய்ச்சிப் பணியில் எதிர்பார்த்த அளவிற்கு மேலாக முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்: உங்களது போட்டியாளர்கள் வர்த்தகத்திலும், விற்பனையிலும் உங்களை வீழ்த்த விரும்புவார்கள். அனைத்து பரிவர்த்தனைகளிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு சாதகமாக இருப்பதுபோல் நடந்து கொள்பவர் மூலம் பாதிப்புகள் ஏற்படலாம். முன்னதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விஷயத்தில் ஒப்பந்தங்கள் நிறைவு செய்யப்படலாம்.

கடகம்: இன்று மற்றவர்களுடன் பழகும்போது வெளிப்படையான போக்கை கடைபிடிப்பீர்கள். மற்றவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வீர்கள். நாளின் பிற்பகுதியில், இந்த நிலை மாறி சிறிது கடுமையாக நடந்து கொள்ள நேரிடும். மாலையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

சிம்மம்: பாராட்டுதல்களைப் பெறத் தயாராக இருங்கள். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த அங்கீகாரம், உங்கள் கடின உழைப்பின் மூலம் இப்போது உங்களுக்கு கிடைத்துள்ளது. சக பணியாளர்கள் மற்றும் பணியில் மூத்தவர்களின் ஆதரவும், உதவியும் கிடைத்து, புதிய பணிகளை மேற்கொள்வீர்கள்.

கன்னி: குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி செயல் புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால், உங்களது நிர்வாகத் திறன்கள் மேலும் அதிகரிக்கும்.

துலாம்: நீங்கள் அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்றைய தினம் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதை நீங்கள் உங்கள் செயல்திறனுடன் வெற்றிகரமாக செய்ய முடியும் மற்றும் உங்கள் திறமை பாராட்டத்தக்கதாக இருக்கும்.

விருச்சிகம்: இன்று பல நிகழ்வுகள் ஏற்படும் நாள் ஆகும். அனுபவம் மூலம் பாடங்களை கற்க மூத்தவர்கள் மற்றும் மேலதிகாரிகள் சொல்வதை கவனமாக கேட்கவும். அவர்கள் ஒத்துழைப்பை உங்களுக்கு வழங்குவார்கள். நீதிமன்றங்கள் தொடர்பான விஷயங்களில் விலகி இருக்கவும். இதனால் பாதிப்புகள் ஏற்படலாம்.

தனுசு: இன்று உங்கள் அன்பிற்கு பாத்திரமானவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து இரவு விருந்து கொடுப்பது, உறவினை பலப்படுத்தும். நீங்கள் அவர்களுடன் ஆர்வமாக உரையாடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனும் நீங்கள் குதூகலமாக நேரத்தை செலவழிப்பீர்கள்.

மகரம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, சுமூகமாகவே இருக்கும் என்றாலும், உங்களது அவசர நடவடிக்கைகள் காரணமாக சில பாதிப்புகள் ஏற்படலாம். எனினும், இது மேலதிகாரிகளிடம் நீங்கள் ஏற்படுத்தியுள்ள நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இருக்காது. உங்கள் கனவுகள் சில நனவாகலாம். அதற்காக எதிர்பார்ப்புகளை அதிகம் வைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் அலுவலகத்தில் பணியில் அதிகம் கவனம் செலுத்தினால், குறிக்கோளை எட்டுவது சாத்தியமே.

கும்பம்: உங்கள் குறிக்கோள்களை நோக்கி, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்படுவீர்கள். அதனை நிறைவேற்ற, அனைத்து வகையிலும் கடுமையாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இதற்கான அத்தனை செயல்திறனும், ஆற்றலும் உங்களிடம் உள்ளது. கடின உழைப்பு இல்லாமல் எதுவும் எளிதாக கிடைக்காது என்பதை நீங்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளீர்கள்.

மீனம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஒரு சாதகமான நாளாக இருக்காது. சிறிய காரணங்களுக்காக, மனம் வருத்தப்படுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்மறையான சிந்தனைகள் மனதில் தோன்றலாம். நம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொண்டு, நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். சில விஷயங்கள் குறித்து அறிந்து வைத்து தெளிவைக் கொடுக்கும்.

ABOUT THE AUTHOR

...view details