பெங்களூரு:கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில் அரியவகை ஆழ்கடல் உயிரினமான கூஸ் பார்னாக்கிள்ஸ் தென்பட்டது. இதைக்கண்ட மக்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
கூஸ் பார்னாக்கிள்ஸ், நண்டுகள் மற்றும் நத்தைகள் போல ஷெல்கள் கொண்ட உயிரினமாகும். பெரும்பாலும் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. மற்ற நாடுகளில் அரிதாகவே காணப்படுகின்றன. பாறைகளும், பவலப்பாறைகளும் கொண்ட கடற்கரைகளில் வாழ்கின்றன. சில வகைகள் ஆழ்கடலிலும் வாழ்கின்றன.