தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாங்கிய கடனை திருப்பித் தராததால் மைனர் பெண் பாலியல் வன்கொடுமை.. முதியவர் கைது - Chattisgarh pocso Case

சத்தீஸ்கரில் 5ஆயிரம் ரூபாய் கடனை திருப்பித் தராத காரணத்திற்காக மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து முதியவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போக்சோ
போக்சோ

By

Published : Jan 29, 2023, 10:59 PM IST

தாம்தாரி: சத்தீஸ்கர் மாநிலம் குருத் கிராமத்தை சேர்ந்த பெண், அதே ஊரைச் சேர்ந்த 60 வயது முதியவரிடம் 5ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களால் வாங்கிய கடனை பெண் திருப்பிச் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பித் தராததை காரணம் காட்டி முதியவர், கடன் வாங்கிய பெண்ணின், மைனர் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவால் சிறுமி அவதிப்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட போது, அவர் கருவுற்று இருக்கும் அதிர்ச்சிகர தகவல் அவரது தாயின் காதுகளில் இடியாய் விழுந்துள்ளது. மகளின் அவலத்திற்கு காரணமான முதியவர் மீது நடவடிக்கை எடுக்க எண்ணிய பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கு தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் மறைவு - சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்!

ABOUT THE AUTHOR

...view details