ஹரியானா: ரஞ்சித் சிங் கொலை வழக்கில் குற்றவாளிகளான தேரா சச்சா சௌதா ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹரியானாவின் பஞ்ச்குலா சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று (அக்.18) தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சௌதா ஆன்மீக அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் உள்ள பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அரசின் முக்கிய துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதங்களை அனுப்புவதற்கு தேரா சச்சா சௌதா ஆன்மீக அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் உடந்தையாக இருப்பதாக குர்மீத் ராம் ரஹீமுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து 2002 ஆம் ஆண்டு ரஞ்சித் சிங் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அக்டோபர் 8 ஆம் தேதி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் , கொலை வழக்கில் தொடப்புடைய மேலும் நான்கு பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.