புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளையும், பாஜக ஆறு தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி இன்று (மே.07) பிற்பகல் 1.20 மணிக்கு பொறுப்பேற்க உள்ளார். இதில் என். ரங்கசாமி மட்டுமே பதவி ஏற்கின்ற நிலையில், அவரது கூட்டணி கட்சி அமைச்சர்கள் பதவி ஏற்கவில்லை.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால், புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு, உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,110 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 பேர் உயிரிழந்தனர்.