தற்போதைய அரசியலில் சமூக வலைதளங்களின் பங்கு அதிகரித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தங்களை மக்களுடன் தொடர்பில் வைத்துக்கொள்ளவும், எதிர் தரப்பினரை விமர்சிப்பதற்கும் சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
முடங்கின காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் - ட்விட்டர் முடக்கம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜய் மாக்கான், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ட்ஃப்ச
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அஜய் மாக்கான், மாணிக்கம் தாகூர், சுஷ்மிதா தேவ், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.