தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Brihati weds Akshay: ராமோஜி ராவ் பேத்தி திருமணம்! - Ramoji Rao

பாரம்பரிய அழகிய நுட்ப வேலைபாடுகளுடன், வண்ண கண்கவர் விளக்குகள் ஒளிர, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கோவில் போன்று அமைக்கப்பட்டிருந்த மணமேடைக்கு மணமகனும், மணமகளும் வந்தனர். வேத மந்திரங்கள் முழங்க ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) அதிகாலை 12.18 மணிக்கு மணமகள் பிரிஹதி (Brihati) கழுத்தில் தாலிகட்டினார் மணமகன் வெங்கட் அக்ஷய் (Venkat Akshay).

Ramoji
Ramoji

By

Published : Apr 17, 2022, 9:33 AM IST

Updated : Apr 21, 2022, 6:52 PM IST

ஹைதராபாத்: உலக புகழ்பெற்ற ராமோஜி குழுமங்களின் தலைவர் ராமோஜி ராவ்-வின் பேத்தி பிரிஹதி திருமணம், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கோலாகலமாக வெகுசிறப்பாக நடைபெற்றது.

கண்கவர் விளக்குகள், பூக்கள் கொண்டு பாரம்பரிய அழகிய வேலைபாடுகளுடன் கோவில் போன்று அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் மணமகள் பிரிஹதி கழுத்தில் தாலி கட்டினார் மாப்பிள்ளை வெங்கட் அக்ஷய். இந்தத் திருமணம் ஏப்.17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.18 மணிக்கு நடந்தது.

மணமகள் பிரிஹதி, ஈநாடு நாளேட்டின் நிர்வாக இயக்குனர் கிரண் ராவ், மார்க்கதர்சி சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைலஜாவின் இரண்டாவது மகள் ஆவார். மணமகன் வெங்கட் அக்ஷய், தந்தமூடி அமர் மோகன்தாஸ்-அனிதா தம்பதியரின் புதல்வன் ஆவார்.

ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வெகுசிறப்பாக நடைபெற்ற இந்த மணவிழாவில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ், மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என். சந்திர பாபு நாயுடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சீரஞ்சிவி, ஜன சேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் உள்பட பலர் மணமக்களை நீடுழி வாழ வாழ்த்தினர்.

தொடர்ந்து, இதர அரசியல் தலைவர்களான ஆந்திர மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே. ராமகிருஷ்ணா, ஜன சேனா அரசியல் குழு தலைவர் நாடென்டுலா மனோகர், பாஜக ஒபிசி தேசிய தலைவர் கே. லக்ஷ்மண், பாஜக தேசிய செயலர் சத்ய குமார், தெலுங்கு தேசம் கட்சியின் தெலங்கானா மாநிலத் தலைவர் பக்கானி நர்சிம்குலு, ஆந்திரா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகுராம் கிருஷ்ணம் ராஜூ, கேசினேனி நானி, சிஎம் சௌத்ரி, கனகமேடலா ரவீந்திர குமார், முன்னாள் அமைச்சர்கள் அவந்தி ஸ்ரீநிவாஸ், காமினேனி ஸ்ரீநிவாஸ், தேவினேனி உமாமகேஸ்வர ராவ், சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி, முன்னாள் எம்பி கம்பம்பட்டி ராம்மோகன் ராவ், தெலுங்கு தேசத்தின் மூத்தத் தலைவர் நல்லரி கிஷோர் குமார் ரெட்டி, தெலுங்கு தேசம் பொலிட்பீரோ உறுப்பினர் ஸ்ரீநிவாச ரெட்டி உள்ளிட்டோரும் மணமக்களை மனதார வாழ்த்தினார்கள்.

நீதியரசர்கள்: ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி சி. பிரவீன் குமார், நீதிபதி ஏவி சேஷாய், நீதிபதி கே விஜயலட்சுமி, நீதிபதி எம் கங்காராவ், நீதிபதி சிஹெச் மனவேந்திரநாத் ராய், நீதிபதி பட்டு தேவானந்த், நீதிபதி ரஞ்சனி, தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி பி ஸ்ரீசுதா, நீதிபதி சி சுமலதா, நீதிபதி ஜி ராதாராணி, நீதிபதி பி. மாதவிதேவி, நீதிபதி கே சுரேந்தர், நீதிபதி எஸ் நந்தா, நீதிபதி எம் சுதிர்குமார், நீதிபதி ஜே சுதிர்குமார், நீதிபதி சரவண குமார், நீதிபதி ஜி அனுபமா சக்கரபோர்த்தி, நீதிபதி எம்ஜி பிரியதர்ஷினி, நீதிபதி ஏ சம்பசிவராவ் நாயுடு, நீதிபதி நாகார்ஜூனா, உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) சல்லா கோதண்டராம் ஆகியோர் மணமக்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கினார்கள்.

தெலங்கானா அமைச்சர்கள்: திருமண விழாவில் தெலங்கானா அமைச்சர்கள் மக்மூத் அலி, ஹரிஷ் ராவ், பூவடா அஜய் குமார், இந்திரகரண் ரெட்டி, ஜெகதீஷ் ரெட்டி, எர்ரபள்ளி தயாகர் ராவ், ஸ்ரீநிவாஸ் கௌடு, திட்ட கமிஷன் துணை தலைவர் வினோத் குமார், ரயிது பந்து சமிதி தலைவர் பல்ல ராஜேஸ்வர் ராவ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்பி நாம நாகேஸ்வர குமார், எம்.பி., சந்தோஷ் குமார், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்எல்சி கல்வகுந்தலா கவிதா, இப்ராகிம்பட்டனம் எம்எல்ஏ மஞ்சிரெட்டி கிஷன் ரெட்டி, ஜூபிளி ஹில்ஸ் எம்எல்ஏ மகந்தி கோபிநாத், தெலங்கானா மருத்துவ சுகாதார உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகத் தலைவர் எல்ரோலா ஸ்ரீநிவாஸ், முன்னாள் எம்எல்ஏ மல்ரெட்டி ரங்கா ரெட்டி ஆகியோர் மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தினர்.

Brihati weds Akshay: ராமோஜி ராவ் பேத்தி திருமணம்!

அதேபோல், தெலங்கானா டிஜிபி மகேந்தர் ரெட்டி, ஏசிபி கூடுதல் டிஜி அஞ்சனி குமார், ஆந்திரா மாநில முன்னாள் தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ் குமார், ஆந்திரா மூத்த ஐபிஎஸ் அலுவலர் ஏபி வெங்கடேஸ்வர ராவ், முன்னாள் டிஜிபி ஜேவி ராமுடு, ஒடிசா வருமான வரித்துறை புலனாய்வு அலுவலர் முதன்மை இயக்குனர் ஜாஸ்தி கிருஷ்ண கிஷோர், சைத்தன்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.எஸ். ராவ், விஞ்ஞான் கல்வி நிறுவனங்களின் தலைவர் லாவ் ரத்தய்யா மற்றும் பேட்மிண்டன் ஒலிம்பிக் நட்சத்திரம் பி.வி. சிந்து ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர்.

சினிமா நட்சத்திரங்கள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சீரஞ்சிவி, முன்னணி தயாரிப்பாளர்கள் முரளி மோகன், அல்லு அரவிந்த், அஸ்வனி தத், டி. சுரேஷ் பாபு, ஷியாம் பிரசாத் ரெட்டி, கே.எல். நாராயணா, சோபு எர்லகட்டா, ஜெமினி கிரண், அக்கினேனி நாகசுஷிலா, இயக்குனர்கள் கே. ராஜவேந்திர ராவ், ராஜமௌலி, போயபட்டி ஸ்ரீனு, ஒய்விஎஸ் சௌத்ரி, நடிகர்கள் மோகன் பாபு, தன்னிகேலா பரணி, சாய் குமார், ராஜேந்திர பிரசாத், அலி, மா தலைவர் மஞ்சு விஷ்ணு, நரேஷ், ராஜசேகர், ஜீவிதா, யமுனா, ஜெயசுதா, பாடகி சுனிதா, எழுத்தாளர் ஜோனவிட்டுலா ராமலிங்கேஸ்வர ராவ் ஆகியோர் மணமக்களுக்கு பூக்கள் தூவி வாழ்த்துகளை வழங்கினர்.

முன்னணி மருத்துவர்கள்: பாஸ்கரன் ராவ் போலினேனி, எம்.வி. ராவ், பவுலிரி கிருஷ்ண சௌத்ரி, மன்னம் கோபிசந்த், குருவ ரெட்டி, நரேந்திர நாத், அனுராதா, கோபாலகிருஷ்ண கோகலே, ரகுராம், குடபட்டி ரமேஷ், பி.எஸ். ராவ், செந்தில் ராஜப்பா, சுப்பையா சௌத்ரி, ஒய். வெங்கட் ராவ், சரத் சந்திர மௌலி, மனஸ் பனிகிரகி, ராமனபிரசாத், விஷ்ணுஸ்வரூப் ரெட்டி, கீதா நாகஸ்ரீ, ஜனகிஸ்ரிநாத் ஆகியோர் மணமக்கள் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்தினர்.

தொழிலதிபர்கள்: இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் துவ்வுரி சுப்பா ராவ், பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் கிருஷ்ண எல்லா, இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எல்லா, ஜிஎம்ஆர் குழுமங்களின் தலைவர் கிராந்தி மல்லிகார்ஜூன ராவ், திவிசி லேபரேட்டரிஸ் நிறுவனர் முரளி கே திவி,நவயுக குழும சி விஸ்வர் ராவ், மை ஹோம் குழும நிறுவனர் தலைவர் ஜூபல்லி ராமேஸ்வர ராவ், ஆர்.வி.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆர்.வெங்கடேஷ்வர ராவ், ரகு, மேகா இன்ஜினியரிங் எம்.டி கிருஷ்ணா ரெட்டி, முன்னணி தொழிலதிபர் தாசரி ஜெய்ரமேஷ், சாந்தா பயோடெக் நிறுவனர் வரபிரசாத் ரெட்டி, சங்கி குழுமத்தை சேர்ந்த கிரீஷ் சங்கி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மணமக்கள் பிரிஹதி- வெங்கட் அக்ஷய் ஜோடியை வாழ்த்தினர்.

இதையும் படிங்க: ராமோஜி ராவ் பேத்தி திருமணம்- குடியரசு துணை தலைவர் பங்கேற்பு!

Last Updated : Apr 21, 2022, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details