ஹைதராபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவை நேற்று(ஆக.21) சந்தித்து பேசினார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவின் இல்லத்தில், அவரை நேரில் சந்தித்து உரையாடினார். திரைப்படத்துறை மற்றும் ஊடகத்துறைக்கு ராமோஜிராவ் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டிய அமித்ஷா, அவர் ஏராளமானோருக்கு முன் உதாரணமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
ராமோஜி ராவ் லட்சக்கணக்கான மக்களுக்கு இன்ஸ்பிரேஷன்... அமித்ஷா பாராட்டு... - ராமோஜி ராவை பாராட்டிய அமித்ஷா
ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ், லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிப்பவராக உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார்.
Ramoji Rao
ராமோஜி ராவை சந்தித்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அமித்ஷா, "ராமோஜி ராவின் வாழ்க்கைப் பயணம், திரைப்படத்துறை மற்றும் ஊடகத்துறையில் உள்ள பல லட்சம் பேருக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. அவரை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆயிரம் ஆண்டுக்கு முன்பே சமஸ்கிருதத்தில் வானிலை ஆராய்ச்சி குறித்த தகவல்