ஏழை மாணவர்களுக்காக 10 லட்சம் கொடுத்து உதவிய ராமோஜி அறக்கட்டளை ராஜமகேந்திராவரம்: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கேனசீமா, மாலிகிபுரம் மண்டலம், லக்காவரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சரஸ்வதி சிசுமந்திர் மேல்நிலை பள்ளியில் அறிவியல் மற்றும் கணினி ஆய்வகம் அமைப்பதற்க்காக ரூபாய் 10 லட்சம் ராமோஜி அரக்கட்டளை வழங்கியது. இதற்கான காசோலையை (check) ராஜமஹேந்திரவரத்தில் உள்ள 'ஈநாடு' அலுவலகத்தில் வைத்து ஸ்ரீ சரஸ்வதி சிசுமந்திர் அமைப்பாளர்களிடம் யுனிடி இன் சார்ஜ் டி.வி.சந்திரசேகரபிரசாத் நேற்று ( 16.06.2023) வழங்கினார்.
காசோலையுடன் (check), ராமோஜி ராவ் எழுதிய கடிதத்தை, ராமோஜி நிறுவனம் மற்றும் அரக்கட்டளை இணைத்துள்ளது. மேலும், லக்காவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏழு அல்லது எட்டு கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்காக மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ சரஸ்வதி சிசுமந்திர் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.
இதையும் படிங்க: Ashes2023: ஆஷஸ் தொடரை அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து; ஜோ ரூட் அபார சதம்!
மேலும் 400 மானவர்கள் படிக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற மானவர்கள் சுற்றி உள்ள வளர்ச்சிகள் காலப்போக்கில் மேலும் விரிவடைய வேண்டும். அது மட்டுமில்லாமல், சிசுமந்திர் பள்ளியில் படிக்கும் ஏழை மானவர்களுக்காக அறிவியல் மற்றும் கணினி ஆய்வகத்தை அமைக்க வேண்டும் என்ற யோசனையை வரவேற்கிறோம். மேலும் இதற்காக தேவைப்படும் ரூபாய் 10 லட்சத்தை நாங்கள் வழங்குவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம்.
இந்நிகழ்ச்சியில், அந்த சமிதியின் கிழக்கு கோதாவரி மாவட்டத் தலைவர் மங்கேன வெங்கட நரசிம்மராவ் பேசினார். அப்போது அவர் ஸ்ரீ சரஸ்வதி சிஷு மந்திரில் அறிவியல் மற்றும் கணினி ஆய்வகம் அமைக்க ஆதரவு தேவை என்று ராமோஜி அறக்கட்டளை தலைவர் ராமோஜி ராவுக்கு கடிதம் எழுதினேன், அதற்கு ராமோஜி ராவ் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார். நாம் அனைவருக்கும் ஊக்குவிதமாக இருக்கும் ராமோஜி ராவ் அளித்த இந்த நன்கொடையில் ஆய்வகம் அமைக்கப்படும் என்றார்.