ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் திரைப்படம் எடுப்பதற்கான பிரத்யேகமான ரம்மியம் நிறைந்த இடங்களைக் கொண்ட திரைப்படப் படப் பிடிப்புத் தளமாக ராமோஜி ஃபிலிம் சிட்டி (Romoji Flim City) திகழ்ந்து வருகிறது.
இதன் குழும நிறுவனத்தலைவர் திரு. ராமோஜி ராவ் அவர்கள், ஜன.26ஆம் நாளான இன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, நிறுவனத்தின் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசு தின கொடியேற்றும் விழா - தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய திரு. ராமோஜி ஐயா அவர்கள்! இந்நிகழ்வில் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் மேலாண்மை இயக்குநர் விஜயேஸ்வரி, ஈடிவி பாரத்தின் மேலாண்மை இயக்குநர் பிரிஹதி செருகுரி, உஷாகிரண் மூவிஸ் பிரைவேட் லிமிடெட்ஸ் இயக்குநர் சிவராம கிருஷ்ணா மற்றும் நிறுவனத்தின் பிற ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:இரு மாநிலங்களுக்கு ரூ.20 கோடி - ராமோஜி ராவ் வழங்கல்!