தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரம்மாண்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மகளிருக்கு சிறப்பு கட்டண சலுகை - Ramoji Film City new offer

பாகுபலி திரைப்படம் எடுக்கப்பட்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மகளிர் தினத்தை முன்னிட்டு 'Women’s Month Special' என்னும் பெண்களுக்கான பிரத்யேக சலுகை கட்டண மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமொஜி ஃபிலிம் சிட்டி மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது
ராமொஜி ஃபிலிம் சிட்டி மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது

By

Published : Mar 1, 2023, 1:17 PM IST

Updated : Mar 1, 2023, 2:05 PM IST

ராமோஜி ஃபிலிம் சிட்டி இந்திய திரையுலகின் ஒரு சொர்கம் ஆகும்

ஹைதராபாத்:சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு உலகின் மிகப்பெரிய ஃபிலிம் சிட்டியான ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பெண்களுக்கான சிறப்பு சலுகை கட்டண மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை ’Women’s Month Special' ஆஃபரை ராமோஜி ஃபிலிம் சிட்டி அறிவித்துள்ளது.

ராமோஜி ஃபிலிம் சிட்டி இந்திய திரையுலகின் ஒரு சொர்கம் ஆகும்

இதுகுறித்து ராமோஜி ஃபிலிம் சிட்டி செய்தித் தொடர்பாளர் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு தெரிவித்ததாவது, ’Women’s Month Special' ஸ்பெஷல் ஆஃபரில் ஃபிலிம் சிட்டியை சுற்றி பார்க்க வரும் பெண்கள் தங்களுடன் ஒரு பெண் அல்லது சிறுமியை உடன் அழைத்து வரலாம். ஆனால், அவர்களிடம் ஒரு டிக்கெட்டிக்கான பணம் மட்டுமே வசூலிக்கப்படும். உடன் வரும் மற்றொருவருக்கு அனுமதி இலவசமாகும்.

ராமோஜி ஃபிலிம் சிட்டி இந்திய திரையுலகின் ஒரு சொர்கம் ஆகும்

பெண்கள் தங்கள் உடன் பணிபுரிபவர்கள் உடனோ அல்லது அவர்கள் தோழியர் உடனோ ஒரு மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவதற்காக இந்த சலுகையை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிலிம் சிட்டிக்கு வரும் பெண்கள் கண்டுகளிக்க பிரம்மாண்டமான திரைப்பட செட்கள், அழகான விதவிதமான தோட்டங்கள் மற்றும் பொங்கும் நீரூற்றுகள், மனதை கொள்ளை கொள்ளும் பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்காக்கள், போன்சாய் தோட்டம் மற்றும் அட்வெஞ்சர் சாகசங்கள் தயார் நிலையில் உள்ளன.

ராமோஜி ஃபிலிம் சிட்டி இந்திய திரையுலகின் ஒரு சொர்கம் ஆகும்

ராமோஜி ஃபிலிம் சிட்டி திரையுலகின் ஒரு சொர்கமாகும். 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ராமோஜி ஃபிலிம் சிட்டி உலகின் மிகப்பெரிய ஃபிலிம் சிட்டி என்னும் கின்னஸ் சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆண்டுதோறும் இங்கு தோராயமாக 200 திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் அனைத்து மொழிகளில் இருந்தும் 2,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

ராமோஜி ஃபிலிம் சிட்டி இந்திய திரையுலகின் ஒரு சொர்கம் ஆகும்

பெண்கள் தங்கள் தோழிகளுடன் மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு ராமோஜி ஃபிலிம் சிட்டி சரியான தேர்வாகும். ’Women’s Month Special' சலுகை ஆன்லைன் புக்கிங், முன்பதிவுகளில் மட்டும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் தகவல் அறிவதற்கு www.ramojifilmcity.com என்ற வலைபக்கத்தை பார்வையிடவும் அல்லது 1800 120 2999 என்ற எண்ணிற்கு போன் செய்யவும்.

இதையும் படிங்க:OTM 2023 - பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ராமோஜி பிலிம் சிட்டி!

Last Updated : Mar 1, 2023, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details