ஐதராபாத் :நாட்டின் 77வது சுதந்திர தின விழா தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள உலக புகழ்பெற்ற ராமோஜி பிலிம் சிட்டியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி செருக்குரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் யுகேஎம்எல் இயக்குநர் சிவராமகிருஷ்ணா, ராமோஜி குழும நிறுவனங்களின் மனிதவளத் தலைவர் அட்லூரி கோபாலராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ராமோஜி குழுமத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்கள், துணை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமோஜி பிலிம் சிட்டி முழுவதும் கோலாகலமாக காணப்பட்டது. ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாக இயக்குனர் விஜயேஸ்வரி, பிலிம் சிட்டி ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முன்னதாக சுதந்திர தின கொடியேற்று மேடை வண்ண வண்ன மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காண்போர் கண்களை கவரும் வகையில் இருந்தது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள வானுயர கட்டடங்களில் மூவர்ண கொடிகள் பறக்கவிடப்பட்டன.
இதையும் படிங்க :"2024ல் செங்கோட்டையில் அல்ல, வீட்டில்தான் கொடி ஏற்றுவார் மோடி" - கார்கே பதிலடி!