தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் நிகழ்வு புதிதொன்றும் இல்லை. ஆனால் சமீப நாட்களாக இலங்கை கடற்படையின் இந்தச் செயல் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது இரண்டாவது முறையாகும்.
என்னதான் தமிழக அரசால் மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டாலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் அவல நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.
இதையும் படிங்க:கீழடி அகழாய்வில் படிகத்தால் ஆன எடைக்கல் கண்டெடுப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் வியப்பு!
கடந்த 25ஆம் தேதி மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வர மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மண்டபத்தைச் சேர்ந்த 9 மீனவர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். மேலும் இலங்கை கடற்படையால் பிடிபட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் இரண்டு நாளில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:மதுரை எய்ம்ஸ் நிர்வாக அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவு.. அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு என்ன?