பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் கோவிட்-19 தொற்று குறித்து பல்வேறு சர்ச்சைப் கருத்துகளைத் தெரிவித்து நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலையைச் சந்தித்துவருகிறார்.
அலோபதி மருத்துவம், மருந்துகள், தடுப்பூசி ஆகியவற்றை விமர்சித்துப் பேசிய ராம்தேவ், அலோபதி மருத்துவத்தை முட்டாள் அறிவியல் எனக் கூறினார்.
இதற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட முன்னணி மருத்துவக் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்து பாபா ராம்தேவிடம் மன்னிப்புக் கோரின. இந்திய சுகதாரத் துறை அமைச்சரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது கருத்தை ராம்தேவ் திரும்பப்பெற்றார்.