தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாராயண் ரானே, ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு! - ராம்தாஸ் அத்வாலே

ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை இந்திய குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்து பேசினார்.

Ramdas Athawale
Ramdas Athawale

By

Published : Aug 26, 2021, 4:01 PM IST

மும்பை : ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் மும்பையில் சந்தித்து கொண்டனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இவர் செவ்வாய்க்கிழமை (ஆக.24) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையில் ராம்தாஸ் அத்வாலே, நாராயண் ரானேவை இன்று சந்தித்து பேசினார். இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு “மக்கள் ஆதரவு உள்ளது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறித்து பேசும்போது, “நாட்டின் சுதந்திர தினத்தை உத்தவ் தாக்கரே மறந்துவிட்டார். அவருக்கு உதவியாளர் தேவைப்படுகிறது” என நக்கலாக பேசினார்.

மேலும் அவரின் கன்னத்தில் அறைவேன் என்றும் கூறினார். இது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாராயண் ரானேவுக்கு எதிராக சிவசேனாவினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்திவருகின்றனர்.

மேலும் நாராயண் ரானேவின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்துவருகின்றனர். இதற்கிடையில் ராம்தாஸ் அத்வாலே, நாராயண் ரானேவை சந்தித்து ஆதரவு அளித்துள்ளார்.

இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 'ஒரு மணி நேரத்தில் முடிச்சிடுவேன்'- ஒன்றிய அமைச்சருக்கு சிவசேனா எம்எல்ஏ மிரட்டல்

ABOUT THE AUTHOR

...view details