உஜ்ஜைன் :அயோத்தியில் அடிக்கல் நாட்டப்பட்ட ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது எனும் அடுத்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்படுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் மஹால்கல் லோக் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.அடுத்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்படலாம். காசி விஷ்வநாதர் கோயில் நமது இந்திய கலாசாரத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது. இதுவரைக் காணாத ஓர் வளர்ச்சி சோம்நாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற சிவதலங்களில் நடைபெற்று வருகிறது.
நாங்கள் ஆன்மிகத்தலங்களின் பெருமைகளை மீட்டெடுக்கிறோம். இந்தியாவின் ஆன்மிக நெறிமுறைகளுக்கு மையமாக விளங்குகிறது உஜ்ஜைன். சிவனின் துணையில் எதுவும் சாதாரணமில்லை. அனைத்தும், அற்புதமானது, மறக்கமுடியாதது, நம்பமுடியாதது.