சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று (ஆகஸ்ட் 22) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சகோதரர்களின் கைகளில் சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி, தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வழக்கம்.
இந்த ரக்ஷாபந்தன் நாளில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, தனது தங்கை பிரியங்கா காந்தியை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் பதிவு
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி, "எனது தங்கையின் அன்பும், துணையும் வாழ்நாள் முழுவதும் ஊக்கம் தருவது. எனது வாழ்க்கையில் சிறப்பான இடத்தைக் கொண்டவர், பிரியங்கா. நாங்கள் இருவரும் தோழர்கள், சக பாதுகாவலர்கள். இந்த ரக்ஷாபந்தன் நாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்" என்றார்.
ராகுல் காந்தியின் ஃபேஸ்புக் பதிவு பிரியங்கா காந்தியின் பதில் பதிவு
ராகுலின் இந்தப் பதிவுக்கு பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார். "அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள். அனைவரும் ஒருவரிடம் ஒருவர் அன்பு செலுத்தி, மகிழ்ச்சியைப் பகிர்ந்து, நிறைவுடன் வாழுங்கள்" என ராகுலின் பதிவுக்கு ட்விட்டரில் பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் பதில் பதிவு இதையும் படிங்க:5 வயதிலே ஆர்எஸ்எஸ் பயிற்சி... மணிப்பூர் ஆளுநராகும் இல.கணேசனின் கதை!