டெல்லி: பெகாசஸ் உளவு பொருள் விவகாரம், வேளாண் சட்டங்கள், பணவீக்கம், கோவிட் நெருக்கடி குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவையில் அடிப்படை பாதுகாப்பு சேவை மசோதா 2021 வியாழக்கிழமை (ஆக.5) நிறைவேற்றப்பட்டது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டுவந்த இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் நிறைவேற்றினார்கள்.
அப்போது இந்த மசோதாவை நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார். இதற்கிடையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் வேவு பார்த்த விவகாரம் குறித்து தொடர் கேள்விகளை எழுப்பினர்.