தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

12 எம்பிக்கள் சஸ்பெண்ட், மாநிலங்களவை ஒத்திவைப்பு! - மாநிலங்களவை ஒத்திவைப்பு

குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை திங்கள்கிழமைக்கு (டிச.6) ஒத்திவைக்கப்பட்டது.

Rajya Sabha
Rajya Sabha

By

Published : Dec 3, 2021, 9:58 PM IST

டெல்லி : குளிர் கால கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் மாநிலங்களவை திங்கள்கிழமை (டிச.6) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சி எம்.பி.,க்களின், 'கட்டுப்பாடற்ற' நடவடிக்கையை கண்டித்து, பா.ஜ., எம்.பி.,க்கள் போராட்டம் நடத்திய நிலையில், 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, 12 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறக் கூடாது என்ற முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

முன்னதாக, ஆகஸ்ட் மாதம் மழைக்கால கூட்டத்தொடரின் முடிவில், பொது காப்பீட்டு வணிக (தேசியமயமாக்கல்) திருத்த மசோதா, 2021 நிறைவேற்றப்பட்டபோது அவையின் மையத்தில் விரைந்த எம்.பி.க்கள் தவறான நடத்தைக்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களில் காங்கிரஸிலிருந்து 6 பேர், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த தலா 2 பேர், சிபிஐ மற்றும் சிபிஎம்மில் இருந்து தலா ஒருவர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் - மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ABOUT THE AUTHOR

...view details