டெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினை இன்று (மார்ச் 20) சந்தித்து பேசுகிறார். அப்போது, பயங்கரவாத பிரச்சினைகள் மற்றும் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக விவாதிப்பார்கள்.
ராஜ்நாத் சிங்- லாயிட் ஆஸ்டின் இன்று சந்திப்பு!
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினை இன்று (மார்ச் 20) சந்தித்து பேசுகிறார்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங் மற்றும் ஆஸ்டின் "இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் பற்றி விவாதிப்பார்கள். தொடர்ந்து, பிராந்திய பாதுகாப்பு சவால்கள் மற்றும் பொதுவான நலன்கள் குறித்து பேசுவார்கள், இந்திய-பசிபிக் பிராந்தியம் குறித்தும் விவாதிப்பார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் பயணமாக ஆஸ்டின் வெள்ளிக்கிழமை (மார்ச் 19) இந்தியா வந்தார். முன்னதாக அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரை சந்தித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.