தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து: டிஆர்டிஓ அறிமுகம் - 2-DG கரோனா மருந்து செய்திகள்

கரோனா நோய் சிகிச்சைக்காக டி.ஆர்.டி.ஓ உருவாக்கியுள்ள புதிய மருந்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிமுகம் செய்துள்ளார்.

2-DG drug
2-DG drug

By

Published : May 17, 2021, 3:28 PM IST

நாடு முழுவதும் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) ஆய்வகம் 2-DG எனும் மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளது.

2-DG உருவாக்கத்தின் பின்னணி

டி-டியோக்ஸி, டி-குல்கோஸ் என்பதன் சுருக்கமே 2-DG. சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சி.சி.எம்.பி.) உதவியுடன் டிஆர்டிஓ அமைப்பு, ஓராண்டாக ஆய்வு மேற்கொண்டு இந்த மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்த மருந்தின் மூலக் கூறுகள் கரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மூன்று கட்ட சோதனை, மருத்துவ சோதனைக்கு உள்படுத்தப்பட்டு முடிவுகள் ஏற்கப்பட்டு, மருந்து தற்போது அறிமுகமாகியுள்ளது. மே ஒன்றாம் தேதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் இதை அவசர பயன்பாட்டுக்கு அனுமதித்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கலந்து அருந்த வேண்டும். இந்த மருந்து, நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் காலத்தையும், மருத்துவ ஆக்ஸிஜன் தேவையைக் குறைப்பதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மருந்தை அறிமுகம் செய்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த மருத்துவக் கண்டுபிடிப்பு இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி சக்தியை நிருபித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி உலகத்திற்கு நாட்டு மக்கள் நன்றிக்கடன்பட்டுள்ளனர். அவர்கள் சார்பில் அரசு நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.

இதையும் படிங்க:உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களையும் கோவாக்சின் தடுக்கும்!

ABOUT THE AUTHOR

...view details