தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2டிஜி கரோனா தடுப்பு மருந்தின் முதல் பேட்ச் இன்று விநியோகம்! - INMAS-DRDO scientists

டி.ஆர்.டி.ஓ தயாரித்துள்ள 2-டிஜி கரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பேட்ச் விநியோகத்தை, இன்று (மே.17) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.

2DG medicine
2டிஜி

By

Published : May 17, 2021, 9:11 AM IST

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகி பரவி வருகிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிராக செயல்படும் 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற மருந்தை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்), ஹைதராபாத் ரெட்டி லேப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

இந்த மருந்தை தீவிரமான கரோனா பாதிப்பிலிருக்கும் நோயாளிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று (மே.17) காலை 10.30 மணியளவில், 2 டிஜி கரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பேட்ச் விநியோகத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக தொடங்கி வைக்கிறார். முதலில் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஊசி வடிவிலே கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வரும் நிலையில், தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கரோனா தடுப்பு மருந்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதுகுறித்து டி.ஆர்.டி.ஓ கூறுகையில், "சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் 2டிஜி கரோனா மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இதன் மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கரோனா நோயாளிகள் விரைவில் நோய் தொற்றிலிருந்து மீள முடியும்" எனத் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details