ஒலிம்பிக் வீரர்களை கௌரவிக்கும் அமைச்சர் ராஜ்நாத் சிங்
புதுடெல்லி: புனேவில் ராணுவப்படை சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டவர்களை கௌரவிக்க உள்ளார்.
ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகளில் பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் விளையாட்டுத் தரத்தை உயர்த்துவதற்கான முக்கிய பொறுப்பாக இந்திய ராணுவத்தின் 'மிஷன் ஒலிம்பிக்ஸ்' திட்டம் 2001இல் தொடங்கப்பட்டது.
இதற்காக புனேவில் ராணுவ விளையாட்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 34 ஒலிம்பியன்கள், 22 காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கங்கள், 21 ஆசிய விளையாட்டுப் பதக்கங்கள், 6 இளைஞர் விளையாட்டுப் பதக்கங்கள், 13 அர்ஜுனா விருதுகளை பெற இந்நிறுவனம் உறுதுணையாக இருந்துள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் நடைபெற உள்ள ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அப்போது இந்தாண்டு நடைபெற்ற முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகள், பதக்கங்களை வென்றவர்கள் ஆகியோரைக் கௌரவிக்க உள்ளார்.
இந்த விழாவில் ராஜ்நாத் சிங்குடன் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்.எம். நாரவானே உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.