தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கம்போடியா பயணம்

இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 22-23 தேதிகளில் கம்போடியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

ராஜ்நாத் சிங் கம்போடியா பயணம்
ராஜ்நாத் சிங் கம்போடியா பயணம்

By

Published : Nov 20, 2022, 8:02 PM IST

டெல்லி:இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கம்போடியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டீ பானின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நவம்பர் 22-23 ஆகிய தேதிகளில் கம்போடியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் தலைவர் என்ற முறையில், சீம் ரீப் என்னுமிடத்தில் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் 9ஆவது வருடாந்திர கூட்டத்தை கம்போடியா நடத்துகிறது.

இந்தக்கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் வரும் 23ஆம் தேதி உரையாற்றுவார். இதனிடையே அவர் கம்போடியாவின் பிரதமரையும் சந்திக்கிறார். இந்தியா-ஆசியான் உறவுகளின் 30 ஆண்டுகளை குறிக்கும் வகையில், 22ஆம் தேதி நடைபெறும் முதல் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு இந்தியாவும் கம்போடியாவும் இணைந்து தலைமை தாங்கும்.

இந்த சந்திப்பின் போது இந்தியா-ஆசியான் கூட்டாண்மையை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசியான் அமைப்பின் பேச்சு வார்த்தையில் இந்தியா கூட்டு நாடாக 1992இல் சேர்ந்தது. 2010 அக்டோபர் 12ஆம் தேதி வியட்நாமின் ஹனோயில் தொடக்க ADMM-Plus கூட்டம் கூட்டப்பட்டது. 2017ஆம் ஆண்டு முதல் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிலிருந்து, ஆண்டுதோறும் ஆசியான் மற்றும் பிளஸ் நாடுகள் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக சந்தித்து வருகின்றனர்.

ஆசியான் பிளஸ் நாடுகளின் கூட்டம் மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் தவிர, பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு விவாதங்களை நடத்துவார். பேச்சுவார்த்தையின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் விஷயங்களை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ராஜ்நாத் சிங் விவாதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குடியரசு தலைவருக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது

ABOUT THE AUTHOR

...view details