தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிபின் ராவத் மறைவு நாடாளுமன்றத்தில் இரங்கல் - ராஜ்நாத் சிங் அறிக்கை

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேருக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களைவையில் அறிக்கை தாக்கல் செய்தார்.

ராஜ்நாத் சிங், rajanath singh
ராஜ்நாத் சிங்

By

Published : Dec 9, 2021, 12:15 PM IST

டெல்லி: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் மாநிலங்களவையில் இன்று (டிசம்பர் 9) தாக்கல் செய்த அறிக்கையில், "குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதியில் இருந்தவர்கள் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, தன்னார்வமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஹெலிகாப்டரில் சென்ற 14 பேரில் பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். உயிருடன் இருக்கும் குரூப் கேப்டன் வருண் சிங்கை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

விபத்தில் மறைந்த பிபின் ராவத் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, நீண்ட அனுபவம் பெற்றவர்.

மறைந்த 13 பேரின் உடல்களும் இன்று டெல்லி கொண்டுவரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும். முப்படையினர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ஏற்கெனவே விசாரணை தொடங்கிவிட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details