தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லடாக் விரைந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்! - ராஜ்நாத் சிங் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மூன்று நாள் பயணம்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Rajnath Singh
Rajnath Singh

By

Published : Jun 27, 2021, 4:43 PM IST

நாட்டின் எல்லையான லடாக் பகுதிக்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அமைச்சருடான பயணத்தின் போது, இந்திய ராணுவத் தளபதி எம்.எம். நரவனேவும் உடன் சென்றார்.

பயணத்தின் முக்கியத்துவம்

இந்தப் பயணத்தின்போது எல்லைப்பகுதியில் புதிய சாலை உட்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கிவைக்கும் அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

அண்மையில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதைத்தொடர்ந்து அமைச்சரின் பயணம் நடைபெறுவதால், அது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க:'நான் தமிழ் மொழியின் அபிமானி' - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details