தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவிலிருந்து ஸ்டாலினுக்கு முதல் வாழ்த்துக் குரல்! - Cm stalin

பாஜகவிலிருந்து மு.க. ஸ்டாலினுக்கு முதல் ஆளாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துச் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து முக ஸ்டாலினுக்கு முதல் வாழ்த்துக் குரல்!
பாஜகவில் இருந்து முக ஸ்டாலினுக்கு முதல் வாழ்த்துக் குரல்!

By

Published : May 2, 2021, 5:56 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 150-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

தேசிய தலைவர்களான சரத்பவார், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல் நபர் இவராவார்.

இதற்கிடையில் இணையத்தில் முகஸ்டாலின்எனும்நான் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது. திமுக தொண்டர்கள் தேர்தல் வெற்றியைக் கொண்டாட ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details