இந்தியா - ஆஸ்திரேலியா '2+2 அமைச்சரவை பேச்சுவார்த்தை' நாளை (செப்.11) ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டுட்டனுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில், இரு நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள், இந்தோ-பசிபிக் பிராந்திய கூட்டுறவு, பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் ஆகியவை குறித்து ஆலோக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.