தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய தலைமை தேர்தல் அலுவலராக ராஜிவ் குமார் நியமனம்! - புதிய தலைமை தேர்தல் அலுவலராக ராஜிவ் குமார்

நாட்டின் புதிய தலைமை தேர்தல் அலுவலராக ராஜிவ் குமார் மே15ஆம் தேதி பதவியேற்கிறார்.

Rajiv Kumar
Rajiv Kumar

By

Published : May 12, 2022, 2:56 PM IST

புது டெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அலுவலர் சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வருகிற 14ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இந்த நிலையில் நாட்டின் புதிய தலைமை தேர்தல் அலுவலராக ராஜிவ் குமார் இன்று (மே12) நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் கிரஜூ அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார். ராஜிவ் குமார் 1984ஆம் ஆண்டு ஐஏஎஸ் அலுவலர் பேட்ஜ் ஆவார்.

1960ஆம் ஆண்டு பிப்.19ஆம் தேதி பிறந்த இவர், பி.எஸ்சி, எல்எல்பி, பிஜிடிஎம், எம்ஏ (பப்ளிக் பாலிசி) உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர் ஆவார். இவர், 36 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அரசு பணிகளில் பணிபுரிந்த அனுபவமிக்கவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதலமைச்சருக்கு தேர்தல் ஆணையம் சம்மன் - பறிபோகுமா பதவி?

ABOUT THE AUTHOR

...view details