இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் இன்று (மே.21) அனுசரிக்கப்படுகிறது. ராஜிவ் காந்திக்கு இந்திய அளவிலான முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராஜிவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்தார். 1981 பிப்ரவரியில், தனது சகோதரர் நின்று வெற்றிபெற்ற சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப்பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அரசியல் வாழ்வில் நுழைந்தார்.
1984ஆம் ஆண்டு, அவரது தாயும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், 40 வயதிலேயே ராஜிவ் காந்தி பிரதமரானார். அவர் 1984 முதல் 1989 வரை இந்தியாவின் 7ஆவது பிரதமராகப் பதவி வகித்தார்.
இதன்மூலம் மிகவும் இளவயதில் பிரதமர் பதவியை ஏற்றவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆனார், ராஜிவ்.