புதுச்சாரி: இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 71ஆவது பிறந்த நாள் விழா இன்று (ஆக 20) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது சிலை, உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புதுச்சேரி வைசியாள் வீதியில் அமைந்துள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் புதுச்சேரியில் அரசு சார்பில் விழா நடைபெற்றது. இதில் அவரது சிலைக்கு அமைச்சர்களும், தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொண்டர்களுக்கு இனிப்புகள் மரியாதை
அந்த வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அவரது உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுப்பிரமணியன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர். மேலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ராஜிவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை