நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்
விழாவில் பேசிய ரஜினிகாந்த், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” என்று கூறினார். மேலும், “தாதா சாகேப் விருதை மறைந்த இயக்குநர் கே. பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன்” என்றும் கூறினார்.
இந்நிலையில், திரைபிரபலங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தாதா சாகிப் பால்கே விருது வென்ற ரஜினிகாந்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனுக்கு நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.
இதையும் பாருங்க: தமிழ் திரையுலக மன்னனுக்கு விருது!