தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஜினி நலம்பெற தீச்சட்டி எடுத்து வேண்டிய ரசிகர்கள்! - Actor Rajini

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற புதுச்சேரி ரசிகர்கள்  தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்
ரஜினிகாந்த் நலமாக

By

Published : Oct 31, 2021, 7:52 AM IST

புதுச்சேரி:திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்த' திரைப்படம், தீபாவளியன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம் (அக்.29) உடல்நலக்குறைவால் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், ரஜினி ரசிகர்கள் கவலையுற்றிருந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அவரது ரசிகர்கள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தவாறு உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை

இந்நிலையில், நேற்று (அக்.30) புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஸ்ரீபாதாள பொன்னுமாரியம்மன் ஆலயத்துக்கு வந்து ரஜினிகாந்த் ரசிகர்கள், அவர் நலம்பெற வேண்டி கையில் தீச்சட்டி ஏந்தியபடி பிராத்தனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' - விதைக்கப்படுவது கல்வியா? காவியா?

ABOUT THE AUTHOR

...view details