ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பணியகத்தினரால் இன்று (நவ.11) மணிப்பூர் மாநிலம் இம்பால் அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் பணிபுரியும் அமலாக்கத்துறை அதிகாரி ரூ.15 லட்சம் லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளார். சீட்டு நிறுவன வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். சீட்பண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த நபர் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறியுள்ளார். இதனை ஏற்ற அமலாக்கத்துறை அதிகாரி ரூ.15 லட்சம் பெறும் போது ஊழல் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் ஊழல் தடுப்பு பணியகத்தின் குழு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்பந்தமான இடங்களில் ஆய்வு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்பண்ட் நிறுவனத்தைச் சேர்ந்தவர் ஜெய்ப்பூர் நகர் ஊழல் தடுப்பு பணியகத்தில் (III) பிரிவில் புகார் செய்துள்ளார். இதன் படி மணிப்பூர் இம்பால் அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யாமல் இருக்க நாவல் கிஷோர் மீனா ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டு சொந்தரவு செய்வதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
அதன்படி சிட்பண்ட நிறுவனத்தில் புகார் உண்மைத் தன்மையைக் கண்டறிய ஊழல் தடுப்பு பணியகத்தின் டி.ஜ.ஜி ரவி மேற்பார்வையில் ஏ.எஸ்.பி ஹிமான்ஷு தலைமையில் புகார் சரிபார்க்கப்பட்டது. இதன்படி புகார் உண்மை எனக் கண்டறியப்பட்டு உடனடியாக அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் லஞ்சம் கேட்ட அதிகாரியைப் பிடிப்பதற்குத் திட்டம் வகுக்கப்பட்டது. இதில் ஏ.சி.பி சுரேஷ்குமார் சுவாமி மற்றும் சி.ஐ சத்யவீர் சிங் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.