ஜெய்ப்பூர் :200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி 119 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனூர் உயிரிழந்ததால், அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே, மீதம் உள்ள 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது.
ராஜஸ்தானை பொறுத்தவரை காங்கிரஸ் - பாஜக இடையே தான் போட்டியே. ஆட்சியை தக்கவைக்க அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் மீண்டும் ஆட்சியை பிடிக்க ராஜேந்திர சிங் ரத்தோர் தலைமையிலான பாஜகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இதைத் தொடர்ந்து பகுஜான் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியில் உள்ளன.
ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், 5 மாநில தேர்தலில் பாஜகவால் எங்கும் ஆட்சி அமைக்க முடியாது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய எக்சிட் போல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்தார்.