ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் சக் சம்ரி கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர், திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனையில், அவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததன் விளைவாகத்தான், உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்று தெரியவந்தது. இதில், இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். 6 பேர் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்
ராஜஸ்தானில் கள்ளச்சாராயம் குடித்த ஏழு பேர் உயிரிழப்பு - ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர்
ஜெய்ப்பூர்: பாரத்பூரில் கள்ளச்சாராயம் குடித்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெய்ப்பூர்
இந்நிலையில் இன்று காலை, மேலும் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கள்ளச்சாராயம் விநியோகம் செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, நேற்று மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.